இடைக்காலப் பிரதமர் நிமல் ஸ்ரீபால அல்லது டலஸ் - Yarl Voice இடைக்காலப் பிரதமர் நிமல் ஸ்ரீபால அல்லது டலஸ் - Yarl Voice

இடைக்காலப் பிரதமர் நிமல் ஸ்ரீபால அல்லது டலஸ்
பிரதமர் பதவியை இராஜினாமா செய்து அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு நிமல் ஸ்ரீபால டி சில்வா அல்லது டலஸ் அழகப்பெரும ஆகிய இருவரில் ஒருவரை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்திற்கான வேட்பாளரை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட தேசிய வழிநடத்தல் குழு தெரிவு செய்யும்.

இடைக்கால நிர்வாகத்துக்கான 11 விடயங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் குழு நேற்று கலந்துரையாடியுள்ளது.

எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, ஜனதா விமுக்தி பெரமுன உட்பட பாராளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுடனும் இடைக்கால அரசாங்கத்துக்காக கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post