குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட உதவித்தொகை வழங்க நடவடிக்கை! - Yarl Voice குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட உதவித்தொகை வழங்க நடவடிக்கை! - Yarl Voice

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட உதவித்தொகை வழங்க நடவடிக்கை!
பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சமுர்த்தி, முதியோர், சிறுநீரக மற்றும் ஊனமுற்றோர் கொடுப்பனவுகளுக்கு உரித்துடைய குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பத்திரம் ஒன்று தெரிவிக்கிறது.

காத்திருப்போர் பட்டியலிலுள்ள குடும்பங்கள் உட்பட அத்தகைய குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் தேவை என்பதை அரசாங்கம் கண்டறிந்துள்ளது.

உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் நிவாரணமாக விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு நிதி மற்றும் சமுர்த்தி அமைச்சர்களின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post