யாழ் திருநெல்வேலியில் எரிவாயு விநியோகத்தில் குழப்பம் - Yarl Voice யாழ் திருநெல்வேலியில் எரிவாயு விநியோகத்தில் குழப்பம் - Yarl Voice

யாழ் திருநெல்வேலியில் எரிவாயு விநியோகத்தில் குழப்பம்நல்லூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் எரிவாயு விநியோகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற போது, பிரதேச செயலரின் தலையீட்டினால் விநியோக ஏற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டமையால் குழப்பம் ஏற்பட்டது.

நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கான எரிவாயுவை நல்லூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின
 ஊடாக பங்கிட்டு அட்டை அடிப்படையில் விநியோகிக்க  ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதனை அறிந்து பெருமளவான மக்கள் வரிசைகளில் நின்று பதிவுகளை மேற்கொள்ள ஆரம்பித்த வேளை நல்லூர் பிரதேச செயலர் திடீரென வந்து விநியோக ஏற்பாடுகளை இடைநிறுத்துங்கள் என உத்தரவிட்டு சென்றார்.

அதனால் நீண்ட நேரம் வரிசையில் நின்ற மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டதனை அடுத்து கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மக்களை சமரசப்படுத்தினார்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post