அவசரகால சட்டத்தை இரத்து செய்யுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை - Yarl Voice அவசரகால சட்டத்தை இரத்து செய்யுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை - Yarl Voice

அவசரகால சட்டத்தை இரத்து செய்யுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கைஅவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டமை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பின் விதிகளின்படி எந்தவொரு குடிமகனுக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது என்று சங்கம் ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

இதன்படி அவசரகால சட்ட பிரகடனத்தை இரத்து செய்யுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவசர காலச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட மையானது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான நிலையில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான நியாயமான காரணங்களை ஜனாதிபதி விளக்க வேண்டும் என சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post