நாட்டின் தற்போதைய நிலவரப்படி, எதிர்வரும் இரண்டு வாரங்களில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்னும் குறைந்த அளவிலேயே எரிபொருளை வெளியிடுவதாகவும், வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
தற்போது நாடு முழுவதும் வரிசைகள் முடிவடையாததற்கு இதுவும் ஒரு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் இரண்டு வாரங்களுக்குள் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
Post a Comment