பிரபுக்களின் ஆட்சியை நீக்கி மக்கள் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்!! யாழ் மேதின நிகழ்வில் ஜேவிபி செயலாளர் - Yarl Voice பிரபுக்களின் ஆட்சியை நீக்கி மக்கள் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்!! யாழ் மேதின நிகழ்வில் ஜேவிபி செயலாளர் - Yarl Voice

பிரபுக்களின் ஆட்சியை நீக்கி மக்கள் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்!! யாழ் மேதின நிகழ்வில் ஜேவிபி செயலாளர்இலங்கையில் பிரபுக்கள் ஆட்சியை நடாத்தும் ராஜபக்ஷக்களின் ஆட்சியை அடியோடு நீக்கி மக்கள் ஆட்சியை ஏற்படுத்த வேண்டுமென ஜேவிபி யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில்  மேதின கூட்டத்தில் நாம் கலந்து கொண்டுள்ளோம்.

எமது நாட்டில் அன்றாடம் கூலி தொழில் செய்கின்ற அப்பாவி தொழிலாளர்கள் தொடர்ந்தும் வஞ்சிக்கப்படுகின்ற நிலையில்
ஆட்சியாளர்கள் அவர்கள் தொடர்பில் சிந்திப்பதில்லை.

தொழிலாளர்களின் உரிமையை வேண்டி இடம்பெறுகின்ற மே தினத்தில்  அப்பாவி தொழிலாளர்களை நசுக்கும் தற்போதைய அரசாங்கத்தை விரைவில் வீடு செல்ல வேண்டும்.

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் அதீத விலை அதிகரிப்பு,  எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு  டொலருக்குத் தட்டுப்பாடு என தற்போதைய அரசாங்கம் மக்களை வாட்டி வதைக்கிறது.

ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் நாட்டை கடனில் மூழ்கடித்து செல்லும் நிலையில் அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் அவர்களின் குறைகளை சுட்டிக்காட்டி தாமும் நாட்டைக் கொள்ளையடித்துத் செல்கிறார்கள்.

ராஜபக்சக்கள் தமது சகபாடிகளுக்குப் படிப்படியாக முழு நாட்டையும் விற்பனை செய்துவரும் நிலையில் இலங்கையில் வாழும் மக்கள் எங்கு செல்வது.

வெளிநாட்டு பிரஜைகளாக இருக்கும் ராஜபக்சக்கள் சிலர் தாய் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன்  வெளிநாடுகளுக்கு தப்பி விடுவார்கள்.

இலங்கையில் வாழும் சிங்கள தமிழ் முஸ்லிம் இனத்தவர்களும் தமது தலைமைகளை நம்பி வாக்களித்து  ஏமாற்றப்பட்ட நிலையில் அரசியல் ஆதரவற்றவர்களாக நிற்கிறார்கள்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் வீதிகளில் இறங்கி அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

போராட்டக்காரர்கள் நாட்டின் இந்த நிலைமைக்கு காரணமாக விளங்குகின்ற ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக தமது பதவிகளில் இருந்து வெளியேற வேண்டும் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டுவரும் நிலையில் ராஜபக்சக்கள் அதிகார மோகத்தால் பதவி விலகாமல் உள்ளனர்.

ஆகவே இனவாதம் இல்லாத, ஊழலற்ற தாய்நாட்டை உருவாக்குவதற்கு  தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் மக்கள் விடுதலை முன்னணியுடன்  கோர்க்கும் நேரம் வந்துள்ள நிலையில் எம்மோடு கைகோருங்கள் என  அவர் மேலும் தெரிவித்தார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post