தமிழ் தேசிய கூட்டு மேதினம் கிளிநொச்சியில் நடைபெற்றது! - Yarl Voice தமிழ் தேசிய கூட்டு மேதினம் கிளிநொச்சியில் நடைபெற்றது! - Yarl Voice

தமிழ் தேசிய கூட்டு மேதினம் கிளிநொச்சியில் நடைபெற்றது!தமிழ்த் தேசிய மேநாள் நிகழ்வுகள் கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது.  கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட மேதின பேரணியானது ஏ9 வீதி ஊடாக கிளிநொச்சி டிப்போ சந்திவரை சென்று அங்கு உள்ள பசுமை பூங்காவில் மேதின நிகழ்வுகள் இடம்பெற்றது.

குறித்த பேரணி ஆரம்ப நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன், எஸ் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மா வை சேனாதிராஜா, சரவணபவன் ஊள்ளிட்டடோர் பேரணியை ஆரம்பித்து வைத்தனர்.

வட மாகாணம் தழுவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த மேதின நிகழ்வில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது அரசியல் கைதிகளின் விடுதலை, விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட  கருத்துக்களை உள்ளடக்கிய வாகனங்களும் குறித்த பேரணியில் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,

இதன்போது ஜனாதிபதி, பிரதமர், பசில் ராஜபக்ச.சமல் ராஜபக்ச மற்றம் விவசாய அமைச்சர் ஆகியோர் விவசாயிகளின் பிரேத பெட்டியை சுமந்து வருகின்ற காட்சிகளையும் சித்தரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post