சட்டவிரோதமாக கடலால் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 38 பேர் கைது!! யாழ்ப்பாணம் வவுனியாவைச் சேர்ந்தவர்களும் உள்ளடக்கம்.. - Yarl Voice சட்டவிரோதமாக கடலால் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 38 பேர் கைது!! யாழ்ப்பாணம் வவுனியாவைச் சேர்ந்தவர்களும் உள்ளடக்கம்.. - Yarl Voice

சட்டவிரோதமாக கடலால் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 38 பேர் கைது!! யாழ்ப்பாணம் வவுனியாவைச் சேர்ந்தவர்களும் உள்ளடக்கம்..
இலங்கை தீவின் தென்கிழக்கு கடற்பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​கடல் வழியாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 38 நபர்களுடன் உள்ளூர் பலநாள் மீன்பிடி இழுவை படகு கைப்பற்றப்பட்டது.

 சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது  அம்பாறை ஒகந்த கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான படகு ஒன்று செல்வதை அவதானித்த கடற்படையினர் அதனை வழிமறித்த போது அதில் பலர் இருப்பதை அவதானித்தனர்.

 அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது   அவுஸ்திரேலியாவிற்கு  இடம்பெயர முற்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற நிலையில் படகில் இருந்த 26 ஆண்கள், 05 பெண்கள் மற்றும் 07 குழந்தைகளை கடற்படை  கைது செய்தனர்


 குறித்த ஆட்களை ஏற்றிச் சென்ற பல நாள் இழுவை படகின் எஞ்சினில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதும், கப்பல் நீண்ட பயணத்திற்குப் பொருத்தமற்றது என்பதும் தெரியவந்தது.

 கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, வாழைச்சேனை, சிலாபம், கல்பிட்டி, உடப்புவ, ஜா-எல மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 02 முதல் 60 வயதுடையவர்கள் என அறியக் கிடைத்தது

0/Post a Comment/Comments

Previous Post Next Post