உலக இளையோர் திருக்குறள் மன்றத்தின் ஆண்டு விழாவும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா இன்று மாலை கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் திருமதி வலன்ரீனா இளங்கோவன் தலைமையில் இடம்பெற்றது.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு யாழ் மற்றும் வெளி மாவட்டங்களில் மனனப்போட்டி,பேச்சுப்போட்டி என போட்டிகள் பாடசாலை மட்டத்தில் இடம்பெற்று வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றி கேடயங்களும் பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சிறி
சற்குணராஜா பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த தோடு, எஸ் மதியழகன் ,முன்னாள் கொக்குவில் இந்து கல்லூரி முன்னாள் அதிபர் கமலநாதன், இராஜேஸ்வரி மண்ட உரிமையாளர் செ.திருமாறன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment