யாழ் மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவித்தல்!!! - Yarl Voice யாழ் மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவித்தல்!!! - Yarl Voice

யாழ் மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவித்தல்!!!யாழ் மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவை பெறுநர்களின் கவனத்திற்கு!

நாட்டில் தற்போது  நிலவும் எரிபொருள் பெற்றுக்கொள்வதில்  உள்ள வரையறைகளால் போக்குவரத்து துறையில் எழுந்துள்ள பிரச்சினைகள் காரணமாக மோட்டார்  வாகன போக்குவரத்து திணைக்களத்தினை வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் திறக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் யாழ் மாவட்ட
போக்குவரத்து திணைக்களமும் 
சேவை பெறுநர்களின் தேவை கருதி    திங்கள்,செவ்வாய், மற்றும் புதன் ஆகிய கிழமைகளில் மட்டும் திறந்திருக்கும் என்பதுடன்,  குறிப்பிட்ட நாட்களில் சேவை பெறுநர்கள்  சேவைகளைப்  பெற்றுக்கொள்ள முடியும்.

தங்களின் முழுமையான ஒத்துழைப்பிற்கு நன்றி.

க.மகேசன் 
அரசாங்க அதிபர்/ மாவட்டச் செயலாளர்.
யாழ் மாவட்டம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post