வடமராட்சியில் விபத்து மாணவன் பரிதாப பலி! - Yarl Voice வடமராட்சியில் விபத்து மாணவன் பரிதாப பலி! - Yarl Voice

வடமராட்சியில் விபத்து மாணவன் பரிதாப பலி!



வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில்  நடந்து முடிந்த க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் தோற்றிய மாணவன் பலியாகியுள்ளார்.

குறித்த விபத்தின் போது கரணவாய் மேற்கு பகுதியைச் சேர்ந்த செல்வமோகன் பானுஜன் (வயது-17) என்ற மாணவனே மரணமடைந்துள்ளான்.

யாழ். வடமராட்சி கரவெட்டி குஞ்சர் கடை வீதியில் மோட்டார் சைக்கிளில் செலுத்திக் கொண்டிருந்த குறித்த மாணவனின் மோட்டார் சைக்கிளுக்கு குறக்காக திடீரென மாடு ஒன்று பாய்ந்ததால் பதட்டமடைந்த மாணவன் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த மாணவனை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் சிகிச்சை பலனின்றி மாணவன் மரணமடைந்துள்ளான்.
சம்பவம் தொடர்பான விசாரணையை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post