யாழில் உள்ள பிரபல நகை கடையில் 7 காப்புகளை ஆட்டையை போட்ட கில்லாடிப் பெண்கள் மூவரும் வகையாக மாட்டிக்கொண்டனர்.
கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக்கடையில் நேற்று முன்தினம் சென்ற மூன்று பெண்கள் காப்பு கொள்வனவு செய்வது போன்று பாசாங்கு செய்து கடை உரிமையாளர்கள் அசந்த நேரம் 6 காப்பு மற்றும் ஒரு பூட்டுக் காப்பு என்பவற்றை களவாடிச் சென்றுள்ளனர்.
இவ்வாறு களவாடப்பட்ட காப்புகளின் அளவு 11 பவுண் எனக் கண்டறியப்பட்டது. இதேநேரம் நேற்றைய தினம் யாழ் நகரில் உள்ள பிரபல நிதி நிறுவனம் ஒன்றில் அடைவு வைக்க களவாடப்பட்ட நகைகளை கொண்டு சென்றபோது களவு கொடுத்த கடையின் பணியாளர் ஒருவரும் அதே நிறுவனத்திறகு நிதிசார் விடயமாக சென்றதனால் நகையை அவதானித்து தமது கடையில் களவாடப்பட்ட நகை என்பதனை அறிந்து உடன் நிதி நிறுவனம் மற்றும் கடை உரிமையாளருக்கு தகவல் வழங்கப்பட்டதன் பெயரில் இனம் காணப்பட்டனர்.
Post a Comment