சிவாஜியின் பேரன் புது அவதாரம்.... - Yarl Voice சிவாஜியின் பேரன் புது அவதாரம்.... - Yarl Voice

சிவாஜியின் பேரன் புது அவதாரம்....சிவாஜியின் பேரன் மற்றும் பிரபுவின் மகன் என்ற பெருமையுடன் தமிழ் சினிமாவில், ‘என்ட்ரி’ கொடுத்தார், விக்ரம் பிரபு. பல படங்களில் நடித்திருந்த போதும், சிவாஜியின் பேரன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு, அவர் நடிப்பு இதுவரை பேசப்படவில்லை.

இதன் காரணமாக, தன் தாத்தா மற்றும் அப்பாவின் பெயரை காப்பாற்றும் வகையில், திறமைக்கு சவால் விடக்கூடிய முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேடிப்பிடித்து நடிக்க தயாராகிவிட்டார்.

‘இனிமேல், ஆண்டுக்கு ஒரு படம் என்றாலும், அந்த படங்களில், தாத்தா சிவாஜியை கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் வகையில், அழுத்தமான நடிப்பை கொடுப்பதற்கு தயாராகி வருகிறேன். இதற்காக, ஒவ்வொரு படத்தில் நடிப்பதற்கு முன்பும் பலமுறை, பயிற்சி செய்து, களம் இறங்க திட்டமிட்டுள்ளேன்…’ என்கிறார், விக்ரம் பிரபு.

0/Post a Comment/Comments

Previous Post Next Post