பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்குவதில் நாம் அக்கறையைக் கொண்டுள்ளோம். இவ்வாறான பிரச்சினைகளை மூடி மறைக்காது நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதுடன் சமூக அமைப்புகள் அரசியல் கட்சிகள் இவ்விடயத்தில் கூடுதலான கரிசனை எடுத்து செயற்படவேண்டும் என தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர்கள் மற்றும் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அத்துடன் அவர்களது குடும்பத்தினர் மீதும் பொது அமைப்புகள் எச்சரிக்கையை விடுக்க வேண்டும். பாலியல் குற்றங்களை செய்பவர்கள் வெளியிலிருந்து வரவில்லை. எமது சமூகத்தின் வலியை புரிந்தவர்களே இவ்வாறான செயல்களை செய்கின்றார்கள்.
முல்லைத்தீவு பாடசாலை சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் கைது செய்யப்பட்டாலும் இன்னமும் அந்த சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் கைது செய்யப்படவில்லை. அவர்கள் கைது செய்யப்பட்டு அதற்கான தண்டனைகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அது மட்டுமின்றி மகளிர் அமைப்புகள் இந்த விடயத்தில் அமைதியாக இருப்பது ஏன் என புரியவில்லை.
இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் போது மகளிர் சமூகத்தினர் எங்கே தூங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். நாடு இருக்கும் பொருளாதார பிரச்சினையில் இவ்வாறான பிரச்சினைகளும் அதிகரித்து காணப்படுகின்றது.
பல குற்றச்செயல்கள் பாலியல் துஸ்பிரயோகம் உட்பட ஏனைய சமூக விரோதமான செயற்பாடுகள் யாழ் மாவட்டத்திலும் சரி முல்லைத்தீவிலும் சரி வடக்கிலும் சரி இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறானவர்களுக்கு கடும் தண்டனை வழங்குவதில் நாம் அக்கறையைக் கொண்டுள்ளோம்.
இவ்வாறான பிரச்சினைகளை மூடி மறைக்காது நீதி நிலைநாட்டப்பட வேண்டும். சமூக அமைப்புகள் அரசியல் கட்சிகள் இவ்விடயத்தில் கூடுதலான கரிசனை எடுத்து செயற்படவேண்டும்.
எரிபொருள் பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,
மக்கள் வீதிகளில் நிற்கின்றார்கள் ஆனால் எரிபொருள் விநியோகம் எப்போது என தெரியாது. ஆனால் எமது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் காணவில்லை. மக்கள் வரிசைகளில் காணப்படும்போது இன்று வரைக்கும் எந்த ஒரு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களை சந்தித்ததாக தெரியவில்லை. மக்களுடைய ஆதங்கங்களை புரிந்துகொண்டு கொண்டு அவர்கள் செயற்பட வேண்டும். உங்களால் அந்த பிரச்சினையை தீர்க்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனாலும் கூட மக்களை
ஆற்றுப்படுத்துவதற்காக கூட மக்களுடன் களத்தில் இறங்கி இருக்க வேண்டும் என்றார்.
Post a Comment