நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள 200 குடும்பங்களுக்கு முகமாலை சித்திவிநாயகர் ஆலய தர்மகத்தாவினால் உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட எழுதுமட்டுவாள், முகமாலை , இத்தாவில் ஆகிய கிராமசேவகர் பிரிவில் தற்பொழுது நிலவியிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிப்புக்குள்ளாகியுள்ள தெரிவு செய்யப்பட்ட இருநூறு குடும்பங்களுக்கு,
ஆலய பரிபாலன சபையின் தலைவர் மயில்வாகனன் ஸ்ரீதாசன் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் செயலாளர், கிராம சேவகர்கள் மூலமாக இன்றைய தினம் சித்தி விநாயகர் ஆலய வளாகத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த ஆலய நிர்வாகத்தினரால் போரினால் பாதிப்புக்குள்ளானவர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், மாணவர்கள் என பல தரப்பட்டவர்களுக்கான உதவியினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment