தமிழக மீனவர்கள் 6 பேருக்கு மறியல்: ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு - Yarl Voice தமிழக மீனவர்கள் 6 பேருக்கு மறியல்: ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு - Yarl Voice

தமிழக மீனவர்கள் 6 பேருக்கு மறியல்: ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு
 நேற்று இரவு இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட ஜெகதாபட்டினம் மீனவர்கள் 6 பேரை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் யாழ்ப்பாணம் நீரியல்வளத் துறை அதிகாரிகள் முற்படுத்தினர்.

 தமிழக மீனவரின் வழக்கை விசாரித்த ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி J.கஜநிதிபாலன்  மீனவர்களை வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  உத்தரவிட்டார். 

இதனையடுத்து 
மீனவர்கள் அனைவரும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ஜெகதாபட்டிணம் மீனவர்களை நேரில் சந்தித்த இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் மீனவர்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களை வழங்கினர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக யாழ்ப்பாணம் சிறையில் 11 தமிழக மீனவர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post