யாழ் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 72% அரச உத்தியோகத்தர் களுக்கு 28% எரிபொருள் விநியோகம் - Yarl Voice யாழ் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 72% அரச உத்தியோகத்தர் களுக்கு 28% எரிபொருள் விநியோகம் - Yarl Voice

யாழ் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 72% அரச உத்தியோகத்தர் களுக்கு 28% எரிபொருள் விநியோகம்


யாழ்ப்பாண மாவட்டத்தின் எரிபொருள் விநியோகம் தொடர்பில் அவசர கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்றது.

யாழ் மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

கலந்துரையாடலில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தினர், இராணுவத்தினர், போலீசார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர் கலந்து கொண்டனர்.

இதன்போது நீண்ட நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு எவ்வாறு எரிபொருட்களை விநியோகிப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இனிவரும் காலங்களில் வரும் எரிபொருளை எவ்வாறு விநியோகிப்பது என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதன் போது பொதுமக்களுக்கு 72 விதமான எரிபொருட்கள் விநியோகிப்பதாகவும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுகின்ற அரச உத்தியோகத்தர்களுக்கு 28 விதமான எரிபொருள்களை விநியோகிப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post