தாதிய உத்தியோகத்தர்கள் இடமாற்றத்தில் கை வைக்க வேண்டாம்! வடக்கு சுகாதார பணிப்பாளருக்கு ஆளுநர் பணிபுரை!! - Yarl Voice தாதிய உத்தியோகத்தர்கள் இடமாற்றத்தில் கை வைக்க வேண்டாம்! வடக்கு சுகாதார பணிப்பாளருக்கு ஆளுநர் பணிபுரை!! - Yarl Voice

தாதிய உத்தியோகத்தர்கள் இடமாற்றத்தில் கை வைக்க வேண்டாம்! வடக்கு சுகாதார பணிப்பாளருக்கு ஆளுநர் பணிபுரை!!வட மாகாணத்தில் கடமையாற்றும் தாதியர்களின் இடமாற்றத்தை தற்காலிகமாக கைவிடுமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வட மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரனுக்குப் பணிபுரை விடுத்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பை தெரிய வருவதாவது வட மாகாணத்தில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றத்தை மேற்கொள்வதற்காக வட மாகாண சுகாதார பணிப்பாளர் நடவடிக்கை எடுத்த நிலையில் குறித்த விடையம் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

நாட்டிலுள்ள தற்போதைய நெருக்கடி நிலைமை காரணமாக சுகாதார உத்தியோகத்தர்களின் சேவை அத்தியாவசிய சேவையாக கருதப்படும் நிலையில் குறித்த இடமாற்றத்தை போடுமாறு  வடமாகாண தாதிய சங்கம் ஆளுநரை கோரியதன் அடிப்படையில் குறித்த இடமாற்றம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post