முச்சக்கரவண்டி சாரதிகள், தமது பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் நிலையத்தில் பதிவினை மேற்கொண்டு, எரிபொருள் பெறுவதற்கான நிரப்பு நிலையமொன்றை ஒதுக்கிக்கொள்ளுமாறு வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கேட்டுக் கொண்டுள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பதிவொன்றின் மூலம் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதில், எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் இதற்கான பதிவினை மேற்கொள்ளுமாறு அவர் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு அறிவித்துள்ளார்.
Post a Comment