-பொன்னாலை, சுழிபுரம் காட்டில்- திருட்டு மணல் ஏற்றிச் சென்ற உழவியந்திரம் மடக்கிப்பிடிப்பு! - Yarl Voice -பொன்னாலை, சுழிபுரம் காட்டில்- திருட்டு மணல் ஏற்றிச் சென்ற உழவியந்திரம் மடக்கிப்பிடிப்பு! - Yarl Voice

-பொன்னாலை, சுழிபுரம் காட்டில்- திருட்டு மணல் ஏற்றிச் சென்ற உழவியந்திரம் மடக்கிப்பிடிப்பு!



சுழிபுரம் சவுக்கடியில் இருந்து திருட்டு மணல் ஏற்றிச்சென்ற உழவியந்திரம் ஒன்று வட்டுக்கோட்டை பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. 

நேற்று (22) இரவு 9.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. 

பொன்னாலை தொடக்கம் சுழிபுரம் சவுக்கடி மற்றும் புளியந்துறை போன்ற இடங்களில் தொடர்ந்து இரவு வேளைகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வந்தது. 

கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் இடம்பெறும் இந்த அத்துமீறிய இயற்கை வள அழிப்பை தடுத்து நிறுத்துமாறு கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற வலி.மேற்கு பிரதேச சபைக் கூட்டத்தில் பொன்னாலை வட்டார உறுப்பினர் ந.பொன்ராசா வாய்மொழி மூல கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார். 

குறித்த சட்டவிரோத சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கு பொன்னாலைக்கும் சம்பில்துறைக்கும் இடையே பொலிஸ் காவலரண் ஒன்றை அமைக்குமாறும் பிரதேச சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், நேற்றிரவு உழவு இயந்திரம் ஒன்றில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றிச் சென்றவேளை வட்டுக்கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர்களான மயூரன், மிகிர்சன் ஆகியோர் சுழிபுரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு சமீபமாக வைத்து குறித்த உழவியந்திரத்தை மடக்கிப் பிடித்தனர். 

குறித்த நபர் தொடர்ந்தும் இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்  உழவியந்திரத்துடன் அவர் பொலிஸ் நிலையம் கொண்டுசெல்லப்பட்டார். 

விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post