இரானுவத்தின் தாக்குதலைக் கண்டித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!! - Yarl Voice இரானுவத்தின் தாக்குதலைக் கண்டித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!! - Yarl Voice

இரானுவத்தின் தாக்குதலைக் கண்டித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!!
 காலிமுகத்திடலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
 
"கோல்பேஸ் போராட்டகாரர்கள் மீதான ரணில் - ராஜபக்ஷாக்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிப்போம்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இந்த போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது.

காலிமுகத்திடலில் உள்ள " கோட்டா கோ கம" பகுதிக்குள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நுழைந்த முப்படையினர் மற்றும் பொலிஸார் அங்கிருந்த கொட்டகைகளை அகற்றியதுடன் போராட்டக்காரர்கள் மீதும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டனர்.

குறித்த சம்பவத்தை முன்னிட்டே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post