தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைக்கூட திருத்த வேலைகளுக்னெ வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர், சுன்னாகம் லயன்ஸ் கழகத்தினரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஒரு லட்சம் ரூபா நேற்று (சனிக்கிழமை) கையளிக்கப்பட்டது.
கனடாவில் உள்ள இந்தியன் றெஸ்ரோரன்ற் உரிமையாளர் சாம் அவர்களின் நிதியுதவியில் இந்தச் செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டது.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக் கூடத்தில் சிறு திருத்தவேலைகளுக்காக இந்த நிதியை சுன்னாகம் லயன்ஸ் கழகத் தலைவர் க.தினேஷ், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கச் செயலாளர் லயன் சி.ஹரிகரனிடம் கையளித்தார்.
இந்த நிகழ்வில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்க உப செயலாளர் சோ.செல்வரத்னம் மற்றும் த.சுதாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Post a Comment