- Yarl Voice - Yarl Voice



யாழ்ப்பாணம் குருநகரிலுள்ள தேவாலயமொன்றில் ஞாயிறு ஆராதனை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, தேவாலயத்தை மின்னல் தாக்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

குருநகர், புனித ஆரோக்கியநாதர் தேவாலயத்தில் இன்று (31) காலை 6.30 மணியளவில் ஆராதனை இடம்பெற்றபோதே இந்த சம்பவம் நடந்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் மழை வீழ்ச்சி பதிவான நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

தேவாலயத்தில் நடந்த மின்னல் தாக்கத்தால் மேற்கூரைப் பகுதிகளும், மின் இணைப்புக்களும் சிறிது சேதமடைந்தன. எனினும், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post