யாழில் எரிபொருளை பெற்றுக் கொள்ள இணைய வசதி அறிமுகம்!! - Yarl Voice யாழில் எரிபொருளை பெற்றுக் கொள்ள இணைய வசதி அறிமுகம்!! - Yarl Voice

யாழில் எரிபொருளை பெற்றுக் கொள்ள இணைய வசதி அறிமுகம்!!யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தினை சீராக்குவதற்கு இணைய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


பொதுமக்கள்   (bit.ly/3nPMFv) இந்த இணைப்பின் ஊடக தங்களது ஸ்மாட் தொலைபேசி, கணணி மூலம் எரிபொருளுக்கான கோரிக்கையினை முன்வைக்கமுடியும்.

எரிபொருள் கிடைக்கப்பெறும்போது பொதுமக்களுக்கு எரிபொருள் பெறுவதற்கான திகதி, நேரம் என்பன பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி மூலமாக அறிவிக்கப்படும்.

பொதுமக்கள் குறித்த நேரத்தில் தங்களுக்குரிய எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்.

குறித்த எரிபொருள் கோரிக்கைக்கான விண்ணப்பத்தினை  மாவட்ட செயலக இணையதளத்தின் ஊடாகவும் அணுகமுடியும்.

இவ்வாறு இதனை பயன்படுத்த முடியாதவர்கள் கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்புகொண்டு அதனை அணுகமுடியும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post