இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் தனிப்பட்ட வாசஸ்தலம் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தீக்கிரையாக்கப்பட்ட நிலையல் இது தொடர்பாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய விக்ரமசிங்க அவர்கள் பின்வரும் கருத்துக்களை தெரிவித்தார்:
“எனது மிகப்பெரிய சொத்து எனது புத்தகங்களே! போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் கால நுால்கள் உட்பட்ட 2500 நுால்கள் எனது நூலகத்தில் காணப்பட்டன.
விலைமதிக்க முடியாத பல புராதன ஓவியங்களும், திரிபீடகம் உட்பட பல பெறுமதி வாய்ந்த அன்பளிப்புகளும், புத்தர் சிலைகளும் அதில் இருந்தது.
நாடு பாரிய பொருளாதாரப் பேரழிவிற்குள்ளான வேளையிலேயே நான் நாட்டை பொறுப்பேற்றேன். நாட்டில் நிலவும் பலவீனமான நிர்வாக முறைமையினால், இந்த நாட்டின் பொருளாதார நெருக்கடியை ஒரு சில நாட்களில் மீளப்பெற முடியாது.
அதனை மீட்பதற்கு குறைந்தது ஒரு வருடமாவது ஆகும். இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நான்கு ஆண்டுகள் தேவை என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதாகவும் அதற்கான முதற்கட்ட முயற்சிகளையே தான் முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment