டலஸின் கனவைக் காலைவாரிய இன்றைய இரகசிய வாக்கெடுப்பு - Yarl Voice டலஸின் கனவைக் காலைவாரிய இன்றைய இரகசிய வாக்கெடுப்பு - Yarl Voice

டலஸின் கனவைக் காலைவாரிய இன்றைய இரகசிய வாக்கெடுப்பு"ஜக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகள் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்கத் தீர்மானித்துள்ள போதிலும் அக்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிப்பதாகவே உறுதியளித்துள்ளனர். இது ஓர் இரகசிய வாக்கெடுப்பு. 

எனவே, நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க வெற்றியீட்டுவார் என நான் நம்புகின்றேன்" - என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்றிரவு தெரிவித்திருந்தார். 

ஹரினின் அந்த நம்பிக்கை இன்று தவிடுபொடி ஆகவில்லை. இறுதிநேரத்தில் எத்தனையோ பேர் டலஸின் காலைவாரியுள்ளனர். இது தமிழ், முஸ்லிம், சிங்கள அரசியல்வாதிகள் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post