வடக்கு- கிழக்கிலுள்ள மத குருமார்களுக்கு எரிபொருள் வழங்குவதில் விசேட ஏற்பாடு செய்து கொடுக்கப்பட வேண்டும் என வடக்கு-கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத் தலைவரும், அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உபதலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மதகுருமார்கள் வரிசையில் காத்திருந்து தமது வாகனங்களுக்கு எரிபொருள் பெறுவதில் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகிறார்கள்.
பல ஆலயங்களில் நேரம் தவறாது பூசை ஆற்றிவரும் பூசகர்கள் தெருவில் காத்திருப்பது வருத்தத்திற்குரியது.
எனவே, சகல மதகுருமார்களுக்கும் வாரத்தில் ஒரு நாள் மாலை நேரம் எரிபொருள் வழங்க அரச அதிபர்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விசேட உத்தரவு வழங்கி உதவுமாறு நன்றியோடு வேண்டுகிறோம்.
மத குருமார்களை மதித்து நடாத்துதல் எமது சமூகக் கடனாகும் எனவும் அவர் அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்
Post a Comment