யாழ் பல்கலையில் கவனயீர்ப்பு போராட்டம்..!! - Yarl Voice யாழ் பல்கலையில் கவனயீர்ப்பு போராட்டம்..!! - Yarl Voice

யாழ் பல்கலையில் கவனயீர்ப்பு போராட்டம்..!!பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
யாழ் பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டமொன்று  இடம்பெற்றது.

யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் எற்பாட்டில்  இன்று மதியம் 12 மணியளவில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப்பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசாங்கத்தினுடைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களுடைய போராட்டத்திற்கு மதிப்பளி, நாட்டை கொள்ளை அடிக்காதே, ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே,  காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வழங்கு போன்ற பதாகைகளை ஏந்தி விரிவுரையாளர்கள்  கவனயீர்ப்பினை முன்னெடுத்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post