இரண்டு வாரங்களுக்குள் அனைத்து கட்சி அரசாங்களம் நியமிக்கப்படும் என கொழும்பு அரசியல் வட்டாரங்களை ஆதாரம் காட்டி வெளியான செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.
அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைத்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான கட்சிகள் மற்றும் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிரந்தர அமைச்சரவை ஒன்று எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நியமிக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரிசாட் பதியுதீனின் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் குழுக்கள் இந்த புதிய அமைச்சரவையில் சேர்க்கப்படவுள்ளன.
அதற்காக எதிர்காலத்தில் ரணில் அந்தக் கட்சிகளையும் குழுக்களையும் அழைப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது,
புதிய அமைச்சரவையில் 20 முதல் 37 அமைச்சர்கள் இருப்பார்கள், அதே எண்ணிக்கையிலான அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து, முன்னாள் அமைச்சரவை இடைக்கால அமைச்சரவையாக நேற்று வெள்ளிக்கிழமை பதவிப் பிரமாணம் செய்து கொண்டது. அனைத்து கட்சி அரசாங்கம் அமைக்கப்படும் போது இதில் மாற்றங்கள் எற்படலாம்.
Post a Comment