கருப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வுகள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் இன்று சனிக்கிழமை காலை 9.30 மணி;க்கு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இடம்பெற்றன.
சபை வளாகத்தில் ஒன்று கூடிய தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராகத் திட்டமிடப்பட்டு கட்டவீழ்த்து விடப்பட்ட இனவாதத் வன்முறைகளால் உயிர் நீத்த அப்பாவிப் பொதுமக்களையும் அந் நாட்களில் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட தியாகிகளையும் மௌன அஞ்சலி செலுத்தியதுடன் ஈகைச் சுடரேற்றியும் அஞ்சலித்தனர்.
தொடர்ந்து சபையின் உறுப்பினர்கள் 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக அரச அணுசரனையுடன் கட்டவீழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதம் தொடர்பில் தவிசாளர் உரையாற்றியதுடன் கலந்து கொண்ட உறுப்பினர்களும் கருத்துரைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment