பொலிஸார் சுட்டதில் சந்தேகநபர் மரணம்! - Yarl Voice பொலிஸார் சுட்டதில் சந்தேகநபர் மரணம்! - Yarl Voice

பொலிஸார் சுட்டதில் சந்தேகநபர் மரணம்!முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது  கைக்குண்டு வீச முயன்ற சந்தேகநபர் ஒருவர், பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார். 

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

அம்பலாங்கொடை - மனஹேன, தலகஸ்பே பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் முறைப்பாட்டை விசாரிக்க அப்பகுதிக்கு நேற்று மாலை சென்றுள்ளார். அதன்போது, சந்தேகநபரால் அவர் தாக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதலில் வெட்டுக்காயங்களுக்குள்ளான பொலிஸ் கான்ஸ்டபிளை அங்கிருந்து அப்புறப்படுத்த அயலவர்கள் நடவடிக்கை எடுத்ததுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கும் தெரியப்படுத்தினர்.

அதையடுத்து, பிட்டிகல பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதன்போது, குறித்த சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டார்.

அந்த நபரைத் தடுக்க முயன்றபோது, ​​தன்னிடமிருந்த கைக்குண்டு மூலம் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்க அவர் முயன்றார்.

அதன்போது பொலிஸ் அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சந்தேகநபர் படுகாயமடைந்தார். 

காயமடைந்த சந்தேகநபர் சிகிச்சைக்காக எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும், அவர் இன்று காலை உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post