S.K.நாதன் அறக்கட்டளையின் முழுமையான நிதிப்பங்களிப்பில் யாழ்போதனா வைத்தியசாலையினரின் அவசர கோரிக்கையை கருத்திற் கொண்டு 24 மில்லியன் பெறுமதியான அத்தியாவசிய மருந்து பொருட்கள் சுப்பிரமணியம் கதிகாமநாதன் அவர்களினால் சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ஜானக ஸ்ரீ சந்திரகுப்தா மற்றும் வைத்தியர் அன்வர் ஹம்தானி ஆகியோரிடம் உத்தியோக பூர்வமாக அமைச்சின் செயலகத்தில் கடந்த வியாழக்கிழமை S.K.நாதனினால் கையளிக்கப்பட்டது .
இவ் நன்கொடை மருந்துகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மிக விரைவில் விநியோகிக்கப்படும் என அமைச்சின் செயலாளரால் கூறப்பட்டுள்ளது
இலங்கையில் தற்காலத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மருத்துவம் சார்ந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மானுடம் மிக்க மருத்துவ சேவையை அதன் தேவை கருதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலையில் தட்டுப்பாடு நிலவும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை தற்போதைய யாழ் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் நந்தகுமாரிடம் 860,000/= பெறுமதியான மருந்து பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத் தக்கது.
Post a Comment