வாகன இலக்க தகட்டின் முறைப்படி எதிர்வரும் முதலாம் திகதி வரை எரிபொருள் விநியோகிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றில் குறித்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடளாவிய ரீதியில் நாளை முதல் சிபெட்கோ மற்றும் லங்கா ஐ. ஓ.சி எரிபொருள் நிலையங்களில் பாஸ் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் முதலாம் திகதி முதல் QR முறைப்படி எரிபொருள் விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment