இ.போ.ச யாழ் சாலை பணியாளர்கள் நாளையும் பணிப்பகிஷ்கரிப்பு!! - Yarl Voice இ.போ.ச யாழ் சாலை பணியாளர்கள் நாளையும் பணிப்பகிஷ்கரிப்பு!! - Yarl Voice

இ.போ.ச யாழ் சாலை பணியாளர்கள் நாளையும் பணிப்பகிஷ்கரிப்பு!!இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை பணியாளர்கள் நாளைய தினமும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவரென தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை ஊழியர்கள் இன்றைய தினம் பணிப்பகிஷ்கரிப்பினை மேற்கொண்ட நிலையில் இதுவரை தாக்குதலை நடாத்திய ஊழியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு உள்ளே வெளியில் இருந்து வருகின்ற பேருந்துகள் உள்நுழையாதவாறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் யாழ் சாலையின் செயற்பாடுகள் முடங்கி காணப்படுவதால் வெளியூரில் இருந்து வரும் பேரூந்துகள் தரித்து நின்று பயணிகளை ஏற்றும் செயற்பாடுகள் முடங்கி காணப்படுகின்றது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் (22) இரவு 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட 57 வழித்தட இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் காப்பாளர் இருவரும் கல்கமுவ சாலை இ.போ.ச சாலை ஊழியர்களினால் தலாதகம எனும் பகுதியில் தாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதலை நடாத்திய ஊழியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை ஊழியர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை எரிபொருள் பெறுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக யாழ்ப்பாண மாவட்ட தனியார் பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூரில் நாளைய தினம்(25) சேவையில் ஈடுபடாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாளைய தினம் யாழ் மாவட்டத்தில் பொதுப் போக்குவரத்து பெரியளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post