யாழ் மாநகர திண்மக் கழிவகற்றல் பிரிவினர் பாதுகாப்பு அங்கிகளை அணிய வேண்டும்!! கடுமையான நடவடிக்கை எனவும் எச்சரிக்கை - Yarl Voice யாழ் மாநகர திண்மக் கழிவகற்றல் பிரிவினர் பாதுகாப்பு அங்கிகளை அணிய வேண்டும்!! கடுமையான நடவடிக்கை எனவும் எச்சரிக்கை - Yarl Voice

யாழ் மாநகர திண்மக் கழிவகற்றல் பிரிவினர் பாதுகாப்பு அங்கிகளை அணிய வேண்டும்!! கடுமையான நடவடிக்கை எனவும் எச்சரிக்கையாழ் மாநகர சபை திண்மக்கழிவற்றல் உத்தியோகத்தர்களும் தூய்மைப்பணியாளர்களும் உரிய பாதுகாப்பு அங்கிகளை அணிய வேண்டும் என்றும், அதை அணிய தவறும் பட்சத்தில் அவர்களுக்கான கொடுப்பனவை வழங்காதிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற யாழ் மாநகர சபை அமர்வின் போதே இந்த விடயம் சபை உறுப்பினர்களால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யுஎஸ்எய்ட் அமைப்பின் நிதியுதவியில் யாழ் மாநகர சபையின் திண்மக்கழிவற்றல் உத்தியோகத்தர்களுக்கும் தூய்மைப்பணியாளர்களுக்கும் பாதுகாப்பு அணிகலங்கள் வழங்கிவைத்தது.

ஆனாலும் பெரும்பாலான திண்மக்கழிவற்றல் உத்தியோகத்தர்களும் தூய்மைப்பணியாளர்களும் உரிய பாதுகாப்பு அங்கிகளை அணியாது பணிகளில் ஈடுபடுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post