சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு! - Yarl Voice சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு! - Yarl Voice

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!இலங்கையுடனான பேச்சுவார்த்தையை தொடர்வதற்கு, இலங்கையில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மைக்கு விரைவான தீர்வு கிடைக்கும் என நம்புவதாக சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதுவரை நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளுடனான தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலைமை உன்னிப்பாக அவதானிக்கப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட செயற்பாட்டுத் தலைவர் Peter Brewer மற்றும் செயற்பாட்டுத் தலைவர் Masahiro Nozaki ஆகியோர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post