நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற புதிய ஜனாதிபதிக்கான தேர்தலில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஆதரித்த டலஸ் அழகப்பெரும தோல்வியடைந்ததையடுத்து, சஜித் அணிக்குள் முரண்பாடு அதிகரித்து வருகின்றது.
அதன் வெளிப்பாடாக ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணி தலைவர் பதவியில் இருந்து மயந்த திஸாநாயக்க இராஜிநாமா செய்துள்ளார்.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், பொதுச்செயலாளர் ஆகியோருக்கு இராஜிநாமாக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மயந்த திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலில் ஊடாக நாடாளுமன்றத்துக்குப் பிரவேசித்தார்.
இதேவேளை, மயந்த திஸாநாயக்க எம்.பி., ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து முழுமையாக விலகி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Post a Comment