பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாக, இத்தாலி பிரதமர் இராஜினாமா..! - Yarl Voice பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாக, இத்தாலி பிரதமர் இராஜினாமா..! - Yarl Voice

பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாக, இத்தாலி பிரதமர் இராஜினாமா..!பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாக, இத்தாலி பிரதமர் மரியோ டிராகி  (Mario Draghi )இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இத்தாலியில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் 2021-ம் ஆண்டு  மரியோ டிராகி பிரதமராக நியமிக்கப்பட்டார். பொருளாதார நெருக்கடி காரணமாக இத்தாலியில் எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் அதிகரித்து வருகிறன்றன. இதன் காரணமாக இத்தாலி மோசமான பொருளாதார நிலையை எதிர்கொண்டுள்ளது.

பங்குச் சந்தை  வீழ்ச்சியடைந்த பின்னர் வியாழக்கிழமை மேலும் 2% சரிந்தது.

இதனைத் தொடர்ந்து, மரியா டிராகிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் இதனைக் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன.

அதேவேளையில், தனது பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று மரியா டிராகி கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று அவர் தனது ராஜினாமாவை ஜனாதிபதி மாளிகையில் அளித்ததாகவும், அதனை ஏற்றுகொண்டதாகவும் இத்தாலி ஜனாதிபதி செர்ஜியோ மேட்டரெல்லா அறிவித்திருக்கிறார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post