எரிபொருள் பெறுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக யாழ்ப்பாண மாவட்ட தனியார் பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூரில் நாளைய தினம்(25) சேவையில் ஈடுபடாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணைய அலுவலகத்தில் தனியார் பேருந்து சங்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலுக்கு பின்னர் யாழ் மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடிய போதும் எரிபொருளை பெறுவதற்கான முயற்சி தோல்வியிலேயே முடிந்தது.
நாளையதினம் சேவையில் ஈடுபட எரிபொருள் இல்லாததால் முழு தனியார் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடையும். தூர பேருந்து சேவையும் இடம்பெறாது. பொதுமக்கள் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டுமென யாழ் மாவட்ட பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணையத்தின் தலைவர் பொ.கெங்காதரன் தெரிவித்தார்.
கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது யாழ் மாவட்ட பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணையத்தின் தலைவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், இலங்கை போக்குவரத்து சபை சாலைகளில் தனியார் பேருந்துகள் எரிபொருள் பெறும்போது பாரிய பிரச்சினைகள் ஏற்படுகிறது. தனியார் பேரூந்துகளுக்கு நேற்றும் எரிபொருள் வழங்கப்படவில்லை. நாளையதினம் சேவையில் ஈடுபட எரிபொருள் இல்லாததால் முழு தனியார் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடையும். தூர பேருந்து சேவையும் இடம்பெறாது. பொதுமக்கள் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மாவட்ட செயலர் எரிபொருளை இன்று பெற்றுதர முயற்சித்தபோதும் பலனளிக்கவில்லை. நாளையதினம் எரிபொருள் கிடைத்தால் தொடர்ந்தும் பயணிகள் சேவையில் ஈடுபடுவோம் என்றார்.
இதேவேளை நாளையதினம் வடமாகாணத்திற்குட்பட்ட தூர பேருந்துகளும் சேவையில் ஈடுபடாதென யாழ்ப்பாண மாவட்ட தனியார் தூர பேருந்து சங்க தலைவர் விநாயகமூர்த்தி சஜிந்தன் தெரிவித்தார்.
Post a Comment