நாட்டை விட்டு ஜனாதிபதி வெளியேற முன் பதில் ஜனாதிபதியை நியமிக்கவில்லை - சபாநாயகர் அலுவலகம் அறிவிப்பு - Yarl Voice நாட்டை விட்டு ஜனாதிபதி வெளியேற முன் பதில் ஜனாதிபதியை நியமிக்கவில்லை - சபாநாயகர் அலுவலகம் அறிவிப்பு - Yarl Voice

நாட்டை விட்டு ஜனாதிபதி வெளியேற முன் பதில் ஜனாதிபதியை நியமிக்கவில்லை - சபாநாயகர் அலுவலகம் அறிவிப்புஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (13) அதிகாலை நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவர் வெளியேறுவதற்கு முன்னர் பதில் ஜனாதிபதியாக யாரும் நியமிக்கப்படவில்லை என சபாநாயகர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று அதிகாலை விமானம் ஒன்றில் நாட்டை விட்டுத் தப்பியோடி மாலைதீவு சென்றடைந்துள்ளார்.

மாலைதீவின் தலைநகரான மாலேவில் உள்ளூர் நேரப்படி சுமார் 03:00 மணிக்கு (22:00 GMT) அவர் பயணித்த இராணுவ விமானம் தரையிறங்கியது. அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் பிறிதொரு இடத்துக்கு கோட்டாபய சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அவர் வெளியேற முன்னர் பதில் ஜனாதிபதியாக யாரேனும் நியமிக்கப்பட்டனரா? என்ற கேள்விகள் எழுந்திருந்த நிலையிலேயே அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என சபாநாயகர் அலுவலகம் இன்று காலை உறுதிப்படுத்தியுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post