காலி முகத்திடல் போராட்டத் தளமான 'GotaGoHome' இன் மூன்று முன்னணி செயற்பாட்டாளர்கள் வெளிநாடுகளில் இருந்து மூன்று உள்ளூர் வங்கிக் கணக்குகளுக்கு பெருமளவிலான நிதியைப் பெற்றதாகக் கூறப்படும் அறிக்கைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
இக்குற்றச்சாட்டு தொடர்பில் முறைப்பாடுகள் எதுவும் செய்யப்படாத போதிலும், சி.ஐ.டியினர் தற்போது சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
கடந்த வாரம் இலங்கை வங்கியின் யூனியன் பிளேஸ் கிளையில் மூன்று செயற்பாட்டாளர்கள் மூன்று புதிய கணக்குகளை ஆரம்பித்துள்ளதாகவும், இதன் மூலம் இந்த மூன்று கணக்குகளிலும் வெளிநாடுகளில் இருந்து 45 மில்லியன் ரூபா வைப்பு செய்யப்பட்டுள்ளது.
சில மணிநேரங்களுக்குப் பிறகு, வங்கிக்கு வந்ததாகக் கூறப்படும் போராட்ட செயற்பாட்டாளர்கள், முழுத் தொகையையும் பெற்றதாகவும், இவ்வளவு பணத்தைப் பெற்றதற்கான காரணத்தை விசாரித்த வங்கி அதிகாரிகளை மிரட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment