2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் இன்று (01) முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒன்லைன் முறையின் ஊடாக கோரப்படவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து விண்ணப்பதாரர்களும் www.doenets.lk அல்லது www.onlineeexams.gov.lk/eic என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தின் ஊடாக தமது விண்ணப்பங்களை ஒன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் அரச பாடசாலை மாணவர்கள் ஏற்கனவே தமது பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டுமென பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் உரிய அறிவுறுத்தல்களின்படி விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்ய வேண்டும்.
அதன் அச்சிடப்பட்ட நகல் கிடைத்த பின்னர், தேவை ஏற்படும் பட்சத்தில் அதனை வழங்குவதற்காக தனது வசம் வைத்திருக்க வேண்டும் என பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment