ஏதோவொரு வழியில் சர்வகட்சி ஆட்சி உறுதி - நீதி அமைச்சர் திட்டவட்டம் - Yarl Voice ஏதோவொரு வழியில் சர்வகட்சி ஆட்சி உறுதி - நீதி அமைச்சர் திட்டவட்டம் - Yarl Voice

ஏதோவொரு வழியில் சர்வகட்சி ஆட்சி உறுதி - நீதி அமைச்சர் திட்டவட்டம்


 
"சர்வகட்சி ஆட்சி அமைப்பதற்கு ஏதேனும் அரசியல் கட்சி எதிர்ப்புத் தெரிவித்தால் சேர விரும்பும் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்போம்."

- இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

"சர்வகட்சி ஆட்சிக்கு ஏதேனும் அரசியல் கட்சி எதிர்ப்புத் தெரிவித்தால் எங்களுக்கு வேறு வழியில்லை. சேர விரும்பும் அரசியல் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்போம். இது அனைத்துக் கட்சியாக இல்லாமலும் இருக்கலாம். ஆனால், பல கட்சிகளின் ஆதரவைப் பெற முயற்சிக்கின்றோம். சர்வகட்சி ஆட்சியை ஸ்தாபிப்பதற்கும் புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதற்கும் தொடர்பு இல்லை" - என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post