முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் அவரே சிறந்த முடிவை எடுப்பார் என்று முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படவுள்ளார் என்று வெளியான தகவல் தொடர்பில் அக்கட்சியின் தலைவரான மஹிந்தவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
இது குறித்து மேலதிக கருத்துக்களை வெளியிட அவர் மறுப்புத் தெரிவித்தார்.
Post a Comment