அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்! - Yarl Voice அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்! - Yarl Voice

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்!அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு அரைவாசி சம்பளம் வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திடம் பணம் இல்லாததே இதற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வலய வர்த்தமானி மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, போராட்டம் நடத்தும் மக்கள் மீது பொலிஸார் அசுத்த நீரை கொண்டு அடிக்கிறார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post