தியாக தீபம் திலீபன் நினைவு நாளில் உண்ணாவிரத போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு - Yarl Voice தியாக தீபம் திலீபன் நினைவு நாளில் உண்ணாவிரத போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு - Yarl Voice

தியாக தீபம் திலீபன் நினைவு நாளில் உண்ணாவிரத போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்புதியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு குழுவின் ஏற்பாட்டில் நாளைய தினம் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை
5 மணிவரை நல்லூரில் உள்ள திலீபனின் நினைவிடத்திற்கு அருகிலே உண்ணாவிரதம் இருப்பதாக ஏற்பாடு செய்திருக்கின்றோம் என யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்ததுடன்
எங்களுடைய உறவுகள் அனைவரும் இந்த உண்ணாவிரதத்தில் இனம் சார்ந்த விடுதலையையும், சுதந்தரத்தையும் நேசிப்பவர்களாக, எங்களின் இனத்திற்காக கலந்துகொள்ள வேண்டும் என்றார்.


திலீபன் நினைவேந்தல் ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்.மாவட்ட சிவில் அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஊடக சந்திப்பு இன்று இடம்பெற்றது.

அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

திலீபனின் தியாகத்தின் உச்சத்தின் வரலாற்றினை இளையோர் சமூகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அவர் எவ்வளவு தூரம் உண்ணாவிரதத்தில் தன்னை வருத்தி ஈடுபட்டார் என்பதை நாளைய தினம் ஒரு முழு நாளாக அவரின் நினைவிடத்தில் நாங்கள் உண்ணாவிரதம் இருந்து ஆர்மார்த்தமாக அவருக்கு செய்கின்ற அஞ்சலியாக அது அமையும்.

இதனடிப்படையில் திலீபனின் 5 அம்ச கோரிக்கைகள் இன்றும் அதே போல் உள்ளது. எனவே இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். சிங்கள குடியேற்றங்கள் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எங்கள் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன, அரசியல் கைதிகள் நீண்ட காலம் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள்.

வடக்கு, கிழக்கில் எங்கும் பரவலாக இராணுவ முகாம்கள் அமைத்து இராணுவ சர்வாதிகார ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

ஆகவே தமிழர்களாகிய நாங்கள் அனைவரும் நாளைய தினம் எழுச்சி கொள்ள வேண்டும். நாளைய தினம் நல்லூருக்கு அணி திரண்டு வாருங்கள்.

மதத்தலைவர்கள், தமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாவீரர்களுடைய பெற்றோர்கள், முன்னாள் போராளிகள், ஏனைய அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் அனைவரும் திலீபனின் இலட்சியத்திற்காக எழுச்சி கொள்ள வேண்டும்.- என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post