எதிர்காலத்தில் சிறந்த சமூகத்தை வளர்துத்துக் கொள்வதற்கு சமூகத்திலுள்ள அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என யாழ் இந்து ஆரம்ப பாடசாலையின் அதிபர் தனபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ் இந்து ஆரம்ப பாடசாலை தரம் 3 மாணவர்களின் சிறுவர் சந்தை பாடசாலையின் அதிபர் பே.தனபாலசிங்கம் தலைமையில் மைதானத்தில் இன்று நடைபெற்ற இச் சந்தை வியாபாரம் குறித்து அதிபர் கருத்து வெளியிடுகையில்..
மாணவர்களுக்கு கல்வி அறிவுடன் மேலும் சில அறிவு சார்ந்த விடயங்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் இச் சந்தை வியாபாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது.
இதற்கு மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் தமது முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கி இருப்பதால் மிகச் சிறப்பான முறையில் இச் சந்தை வியாபாரம் ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றிருக்கின்றது.
இன்றைய கால கட்டத்தில் இதே போன்று ஒவ்வொரு பெற்றோர்களும் மாணவர்களுடன் மிகவும் நெருங்கிய உறவைப் பேணுவது மிகவும் முக்கியமான விடயமாக கருதப்படுகின்றது.
இவ்வாறு பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்வதன் ஊடாக நல்லதொரு சிறந்த சமூகத்தை வளர்த்துக் கொள்ள முடியுமென நம்புகின்றேன்.
ஆகையினால் எதிர்காலத்தில் நல்லதொரு சமூகத்தை உருவாக்குவதற்கு சமூகத்திலுள்ள அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன் என அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment