தியாக தீபம் நினைவாக நல்லூரில் இரத்ததானம் - Yarl Voice தியாக தீபம் நினைவாக நல்லூரில் இரத்ததானம் - Yarl Voice

தியாக தீபம் நினைவாக நல்லூரில் இரத்ததானம்



தியாகதீபம் திலீபன் நினைவாக இன்று ஞாயிற்றுக்கிழமை(25) காலை முதல் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் நினைவுத் தூபிக்கு அருகில் “தியாகதீபத்திற்காக ஒரு துளி குருதி!” எனும் தொனிப் பொருளில் இரத்ததான முகாம் இடம்பெற்று வருகிறது.

மேலும் சிறுவர்கள் மற்றும் மாணவர்களுக்கான சித்திரப்போட்டியும் இடம்பெற்று வருகின்றது.

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு ஆண்டின் 11ஆம் நாள் நினைவேந்தல் இன்றையதினம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

நினைவேந்தல் எட்டு மணியளவில் ஆரம்பித்ததுடன், பொதுச் சுடர் ஏற்றப்பட்டு,திலீபனின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பலரும் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post