ஐ.சி.சி. இருபது 20 உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது இங்கிலாந்து...!!! - Yarl Voice ஐ.சி.சி. இருபது 20 உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது இங்கிலாந்து...!!! - Yarl Voice

ஐ.சி.சி. இருபது 20 உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது இங்கிலாந்து...!!!பாகிஸ்தானை 5 விக்கெட்டுகளால் வெற்றிகொண்ட இங்கிலாந்து அணி எட்டாவது ஐ.சி.சி. இருபது 20 உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது.

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற 8 ஆவது  ஐ.சி.சி. இருபதுக்கு - 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

இந்நிலலையில், முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து 138 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கைகடந்து 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று 8 ஆவது  ஐ.சி.சி. இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post