தேசிய ரீதியில் யாழ் மாவட்ட செயலகத்துக்கு முதலிடம்..!! அங்கஜன் எம்பி வாழ்த்து - Yarl Voice தேசிய ரீதியில் யாழ் மாவட்ட செயலகத்துக்கு முதலிடம்..!! அங்கஜன் எம்பி வாழ்த்து - Yarl Voice

தேசிய ரீதியில் யாழ் மாவட்ட செயலகத்துக்கு முதலிடம்..!! அங்கஜன் எம்பி வாழ்த்துதேசிய உற்பத்திதிறன் செயலகத்தால் அரச திணைக்களங்களுங்களிடையே 2020ஆம் ஆண்டுக்காக நடைபெற்ற தேசிய உற்பத்தி திறன் போட்டியின் முதலிடத்துக்கான விருது யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இருந்த அங்கஜன் எம்பி வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.மேலும் தெரிவித்துள்ளதாவது

மக்களுக்கான சேவையை வினைத்திறனோடு, துரிதமாகவும், விளைதிறன் கொண்டதாகவும் முன்னெடுத்த யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு இந்த விருது கிடைத்துள்ளமை பெரு மகிழ்ச்சியை தருகிறது.

மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவராக சேவையாற்றிய காலப்பகுதியில் எமது மக்களுக்கான அபிவிருத்திகள், உதவித்திட்டங்கள், செயற்றிட்டங்களை உரிய காலத்தில் உயர் பலன் தரக்கூடிய வகையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட பணிகளை நான் அறிவேன்.

அனைத்து துறைகளிலும் யாழ் மாவட்டம் முதலிடத்தை பெற வேண்டும் என்ற எமது பெரு விருப்பத்துக்கமைய நிர்வாக ரீதியிலும் இன்று முதலிடத்தை பிடித்துள்ளமை இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் க. மகேசன் தலமையிலான மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post